முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பி.கே.என் 45வது ஆண்டு பொருட்காட்சி திறப்புவிழா அழைப்பிதழ் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் நிர்வாகிகள் வழங்கினர்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள பி.கே.என் 45வது ஆண்டு பொருட்காட்சி திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், பி.கே.என் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் வைகாசி உற்சவ விழா சிறப்பு கமிட்டி நிர்வாகிகள் வழங்கினார்கள்.
திருமங்கலம் அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பி.கே.என் மைதானத்தில் மே மாதம் 13ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை பி.கே.என் 45வது ஆண்டு பொருட்காட்சி நடைபெறுகிறது.பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த பொருட்காட்சியை மேமாதம் 13ம் தேதி மாலை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைக்கிறார்.கோவில் டிரஸ்டி ரமேஷ்பாபுநாடார் குத்துவிளக்கேற்றுகிறார். இந்நிலையில் பொருட்காட்சி திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை திருமங்கலம் பி.கே.என் உறவின்முறை நாட்டாண்மைகள் பூமிநாதன் நாடார்,திருஞானம் நாடார்,சுரேஷ்கண்ணா நாடார்,வைகாசி உற்சவவிழா சிறப்புகமிட்டி தலைவர் பாலமோகன் நாடார்,செயலாளர் செல்வம் நாடார்,பொருளாளர் விஜயகுமார் நாடார் மற்றும் உறவின்முறை பங்காளிகள்,பி.கே.என் பள்ளி கல்லூரி கமிட்டி,ஸ்ரீபத்திரகாளி மாரியம்மன் தேவஸ்தான நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை திருமங்கலம் பயணியர் மாளிகையில் நேரில் சந்தித்து மரியாதை செய்து அழைப்பிதழை வழங்கினார்கள்.பின்னர் பி.கே.என் 45வது ஆண்டு பொருட்காட்சியை திறந்து வைத்து வாழ்த்திடுமாறு நிர்வாகிகள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
அப்போது மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் சதீஸ்சண்முகம்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,பொறியாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து