முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழு ஆய்வு.

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      தேனி
mullai periyaru 11 5 18

 கம்பம், - முல்லைப் பெரியாறு அணையில் நேற்று மத்திய துணைக் குழு ஆய்வு மேற் கொண்டது.இந்த ஆய்வில் அணை பலமாக உள்ளதாக மத்திய துணைக் குழு கூறினார்கள். முல்லைப் பெரியாறு அணையில் கடந்த மார்ச் 6 ல் மத்திய துணைக்குழு ஆய்வு செய்த போது  நீர் மட்டம் குறைந்திருந்தது. கடந்த சில நாட்களாக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை தொடர்ந்து 2 மாதங்களுக்குப்பின் நேற்று துணைக்குழு ஆய்வு செய்தது.மத்திய நீர் ப் பாசன செயற் பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான துணைக் குழுவில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சுப்பிரமணியன்,கேரளா சார்பில் நீர்ப் பாசன உதவி பொறியாளர்கள் ஷாஜி,ஜசக்,பிரசீத் உடன் இருந்தனர்.இக்குழு மெயின் அணை,பேபி அணை ஷட்டர்,காலரி ஆகிய ப்பகுதிகளை பார்வையிட்டது.பெரியாறு அணையில் இருந்து வெளியேறிய சுவீப் பேஜ் தண்ணீரின் அளவை மார்ச் 6 ல் எடுக்கப்பட்ட அளவுடன் ஓப்பிடப்பட்டது.தொடர்ந்து  13 ஷட்டர்களின் இயக்கம் பராமாரிப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.நேற்று மாலையில் குமுளி அருகே நீர்ப்பாசனத்துறை கட்டுப்பாடு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அதன் அறிக்கை மூவர் குழுவுக்கு அனுப்பபட உள்ளது.பெரியாறு அணை நீர் மட்டம் நேற்று காலை நிலவரப்படி 112.60 அடியாக(மொத்த உயரம் 152 அடி)இருந்தது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 286 கன அடியாகவும் தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக நீர் திறப்பு 100 கன அடியாகவும் இருந்தது.அணையில் நீர் இருப்பு 1328 மில்லியன் கன அடியாகும்.மழை அளவு விபரம் பெரியாறில் 18.8.மி.மீ.தேக்கடியில் 45.4.மி.மீ மழை பதிவானது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து