முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தல்: 70 சதவீத வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 12 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : 222 தொகுதிகளுக்கான கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. பெங்களூருவில் அமைந்துள்ள ஜெயா நகர் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

15-ம் தேதி முடிவு...

தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 112 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். இதன் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் மொத்தம் 2,654 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 4,96 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவற்றில் 2.44 கோடி பெண் வாக்காளர்கள் ஆவர். 15 லட்சம் பேர் 18 முதல் 19 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள் ஆவர்.

58,546 வாக்குச்சாவடிகள்

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 58,546 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து