முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: ரஷியாவின் சோச்சியில் அந்நாட்டு அதிபர் புடினை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். சர்வதேச விவகாரங்கள் குறித்தும், இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு உறவு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தப் பயணத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இதுவொரு சிறந்த நிகழ்வாகும். இது இரண்டு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. எனது அரசியல் வாழ்க்கையில், ரஷ்யாவும், புடினும் மிகவும் முக்கியமானவர்கள் என்றார்.

புடின் கூறுகையில், மோடியின் பயணத்தின் மூலம், இருதரப்பு உறவுக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. ரஷ்யா-இந்தியா பாதுகாப்பு அமைச்சகங்கள் தங்களிடையேயான நெருங்கிய தொடர்பையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. இதுவே நமது நாடுகள் இடையே மிகப்பெரிய ராஜ்ய கூட்டுறவு நிலவுவதை தெரியப்படுத்தும் என்றார்.

பின்னர், அங்குள்ள ரஷ்ய கலாச்சார அரங்கை மோடி பார்வையிட்டார். மேலும் சிரியஸ் கல்வியரங்கில் உள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அனைவரையும் இந்தியா வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து இருநாடுகளின் தலைவர்களும் அங்கிருக்கும் புகழ்பெற்ற கறுங்கடல் பகுதியில் படகு சவாரி செய்தனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை இந்தியா திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து