முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காடுவெட்டி குரு மரணம்: கல்வீசி தாக்கியதில் 79 பஸ்கள் சேதம் பல இடங்களில் கடையடைப்பு

சனிக்கிழமை, 26 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவை தொடர்ந்து சொந்த ஊரான காடுவெட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன. கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இங்கு 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 பஸ்கள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூரை அடுத்த ஒண்டிகுப்பத்தில் 3 பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வேலூரில் இருந்து ஆற்காட்டிற்கு சென்ற அரசு பஸ் மீது மேல்விஷாரத்தில் கல்வீசப்பட்டது. ஆற்காட்டில் மட்டும் 3 பஸ்கள் மீது கல்வீசி உடைக்கப்பட்டது. 9 மாவட்டங்களில் மொத்தம்79 பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து கல்வீசியவர்களை தேடி வருகிறார்கள். இந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து