முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவையற்ற செலவுகளைக் குறைக்குமாறு அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர், தேவையற்ற நிர்வாகச் செலவினங்களைக் குறைக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, புதிய வாகனங்கள் வாங்குவது, அலுவலகங்கள் மற்றும் அரசு குடியிருப்புகளை புதுப்பிப்பது போன்ற திட்டங்களைத் தவிர்க்குமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.

மாநில முதல்வராகப் பொறுப்பேற்று சில நாள்களே ஆனாலும், பல்வேறு நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ள குமாரசாமி திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். அடுத்த 15 நாட்களுக்குள் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்வது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், மாநில அரசுத் துறைகளுக்கு அவர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். நிர்வாக செலவினங்களைக் குறைக்குமாறும், புதிய வாகனங்கள் வாங்குவதைத் தவிக்குமாறும் அதிகாரிகளுக்கு அதன் வாயிலாக குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து