சென்செக்ஸ் குறியீடு 137 புள்ளிகள் சரிவு

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      வர்த்தகம்
stock 2018 02 01

இந்திய ரிசர்வ் வங்கியின் 2018-19ம் ஆண்டுக்கான 2-வது நிதி கொள்கை ஆய்வு கூட்டம் நேற்று தொடங்கி வரும் ஜூன் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகள் எதிலும் ஈடுபடாமல் இருக்கின்றனர்.

இதனால் மும்பை பங்கு சந்தையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 137.60 புள்ளிகள் சரிவடைந்து 35,089.66 புள்ளிகளாக காணப்பட்டது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 48 புள்ளிகள் சரிவடைந்து 10,696.20 புள்ளிகளாக காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து