முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவின் முக்கிய கூட்டாளி சீனாதான்: கிம் ஜோங்

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: சீனாதான் வடகொரியாவின் முக்கிய கூட்டாளி என்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் -உன் அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த 12-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, வட கொரியாவுக்கு திரும்பிய கிம், அண்டை நாடான சீனாவுக்கு உடனடியாக பயணம் மேற்கொண்டார்.

சீனாவில் இரு நாள்கள் தங்கியிருந்த அவர், அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் பிற தலைவர்களை சந்தித்துப் பேசினார். சீன அதிபரை சந்தித்தபோது, டிரம்ப்புடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமானதாக அமைவதற்கு ஆக்கப்பூர்வமான மற்றும் உறுதியான ஆதரவு அளித்ததற்காக சீனாவுக்கு கிம் நன்றி தெரிவித்து கொண்டார். பின்னர் சீன பயணத்தை முடித்துக் கொண்டு வட கொரியாவுக்கு கிம் புறப்பட்டு சென்றார். 

இதை தொடர்ந்து, சீனாதான் வட கொரியாவின் முக்கிய கூட்டாளி என்று கிம் ஜோங்-உன் அறிவித்துள்ளார். மேலும், சீனாவில் நலனுக்கு எதிராக வட கொரியா செயல்படாது என்பதை அந்நாட்டில் தாம் மேற்கொண்ட சுற்றுப்பயணம் உறுதி செய்திருப்பதாகவும் கிம் ஜோங் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து