போயிங் விமானங்களை வாங்கும் ஜெட் ஏர்வேஸ்

புதன்கிழமை, 27 ஜூன் 2018      வர்த்தகம்
jet airways skit(N)

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதிதாக 75 போயிங் விமானங்களை (737 மேக்ஸ்) வாங்க திட்டமிட்டிருக்கிறது. இந்திய விமானத்துறை வேகமாக வளர்ந்து வருவதற்கு ஏற்ப விமானங்களை வாங்க ஜெட் ஏர்வேஸ் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறது. இதனையும் சேர்ந்து மொத்தம் 225 விமானங்களை வாங்க நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

போயிங் 737 விமானம் கடந்த வாரம்தான் ஜெர் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கிடைத்தது. இந்த விமானம் கிடைத்த ஒரு வாரத்தில் மேலும் 75 விமானங்களை வாங்க ஜெட் ஏர்வேஸ் முடிவெடுத்திருக்கிறது. 737 மேக்ஸ் விமானத்தை பெற்ற முதல் இந்திய விமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் என நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து