எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். வயது (80). அவரது மரணத்தை வங்கதேச தேசியவாத கட்சி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. கலிதா ஜியா மறைவால் அவரது கட்சித் தொண்டர்களும், மக்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். கலிதா ஜியா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் மறைவு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் இன்று அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச இடைக்கால அரசுடன் கலீதா ஜியாவின் கட்சியினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில், கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு இன்று பிற்பகல் வங்கதேச நாடாளுமன்ற வளாகத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்று அவரது கணவரும் வங்கதேச முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் இடைக்கால ஆலோசகர் முஹம்மது யூனுஸ், தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு வெளியிட்ட செய்தியில், கலீதா ஜியாவின் மறைவுக்கு தேசியளவில் 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று வங்கதேசம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். முன்னதாக, கலீதா ஜியாவின் கணவரும் வங்கதேசத்தின் 6-வது அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் கடந்த 1981 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


