இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 26 ஜூலை 2018      விளையாட்டு
england team 2018 6 30

லண்டன் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடில் ரஷித்...

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி-20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசியதோடு கோலிக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கிய அடில் ரஷித் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மீண்டும் தேர்வு...

சென்னையில் 2016 டிசம்பரில் நடைபெற்ற டெஸ்ட் தான் அடில் ரஷித் கடைசியாக விளையாடியது. 10 டெஸ்டுகள் மட்டுமே விளையாடியுள்ள ரஷித், கடந்த பிப்ரவரி மாதம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்தார். இனிமேல் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் அறிவித்தார். ஆனால் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார் அடில் ரஷித். இவர் இதற்கு முன்பு விளையாடிய 10 டெஸ்டுகளும் வெளிநாடுகளில் விளையாடியவை. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றால் தன் சொந்த மண்ணில் அவர் விளையாடக்கூடிய முதல் டெஸ்டாக அமையும்.
இங்கிலாந்து அணி:
ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), அலாஸ்டர் குக், சாம் கர்ரன், கீடன் ஜென்னிங்ஸ், டேவிட் மலான், ஜேமி போர்டர், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து