முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

140 வருட கிரிக்கெட் வரலாற்றில் ‘1000’ டெஸ்டில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்றது இங்கிலாந்து - இந்தியாவுக்கு 4-வது இடம்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான பர்மிங்காமில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி 140 வருட கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி ஆடிய 1000-வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்த வரிசையில் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது.

முதல் டெஸ்ட்...

1877-ம் ஆண்டு முதன்முதலாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தது. அப்போது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி நடத்தப்பட்டது. அதன்பின் தற்போது 12 அணிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. இந்த டெஸ்டின் விளையாடியதன் மூலம் சுமார் 140 வருட காலத்தில் இங்கிலாந்து 1000-மாவது டெஸ்டில் விளையாடிய முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

523 போட்டிகளில்...

ஆஸ்திரேலியா 812 டெஸ்ட் போட்டிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 535 போட்டிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது. இந்தியா 523 போட்டிகளில் விளையாடி 4-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 427 போட்டிகளுடன் 5-வது இடத்திலும், நியூசிலாந்து (426) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் (415) 7-வது இடத்திலும், இலங்கை (274) 8-வது இடத்திலும், வங்காள தேசம் (108) 9-வது இடத்திலும் உள்ளது.

முதல் 5 நாடுகள்:

1) இங்கிலாந்து - 1000 போட்டிகள்.
2) ஆஸ்திரேலியா - 812 போட்டிகள்.
3) மே.இ.தீவுகள் - 535 போட்டிகள்.
4) இந்தியா - 523 போட்டிகள்.
5) தென் ஆப்ரிக்கா - 427 போட்டிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து