மருத்துவர்கள் கனிவுடன் சிகிச்சை வழங்கிட வேண்டும் : அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேண்டுகோள்

baskeran

 சிவகங்கை, - சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சாத்தரசன்கோட்டை ஊராட்சியில் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சென்று கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்; திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள உள்நோயாளிகள் பிரிவிற்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை வழங்குவதன் தன்மை குறித்து கேட்டறிந்ததுடன் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தலைமை மருத்துவமனையில் உள்ள வசதிகளைப் போல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து வகையான சிகிச்சைகளும் வழங்க உத்தரவிட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நல்லமுறையில் சிகிச்சை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
          அதனைத் தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவிற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்கூடம், மருந்துகள் வழங்கும் அறை மற்றும் மருந்துகள் இருப்பு விபரம் குறித்து கேட்டறிந்ததுடன் தேவையான மருந்து இருப்புகள் கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்ததுடன் கிராமப்பகுதி மக்களின் உன்னத உறைவிடமாக திகழ்வது ஆரம்ப சுகாதார நிலையமே. எனவே அப்பகுதியில் பணியாற்றும் மருத்துவர்கள் பெறுமைக்குரியவர்களே ஆவார்கள். கிராமத்தில் சேவை செய்வது என்பது மிக மிக உன்னதமான பணியாகும். அந்தப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்கள் வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசினாலே பாதி நோய் குணமாகிவிடும். எனவே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அன்பாக பேசி சிகிச்சை வழங்கும் பொழுது நோய் குணமாவது மட்டுமன்றி மகத்தான பேரும் மருத்துவர்களை வந்து சேரும். அதற்கேற்ப உங்கள் பணி இருந்திட வேண்டுமென   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
           பின்னர் சாத்தரசன்கோட்டை நியாயவிலைக் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டததுடன் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தங்குதடையின்றி குறித்த காலத்தில் வழங்கிட வேண்டுமென   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
          முன்னதாக இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் தடியமங்;கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம்   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்    மனுக்கள் பெற்று மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
          இந்நிகழ்ச்சியில் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புத்துரை, கலைமீனாள், மீனாட்சி, முன்னாள் கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் சசிக்குமார், பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து