முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: 51 மராத்திய தலைவர்களை சந்திக்க ராகுல் காந்தி முடிவு

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட உறுப்பினர்களுடன் 2-ஆவது முறையாக காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் புது டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் கெலாட்  உட்பட பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். ஆனால் உடல்நிலை காரணமாக முக்கிய தலைவர் சோனியா இதில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் என்.ஆர்.சி. கணக்கெடுப்பு, அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு சர்ச்சை, மாரத்திய ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும் அதில் காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வருகிற ஆகஸ்டு 8-ஆம் தேதி முக்கியமான 51 மராத்திய தலைவர்களை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து