முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.முத்து நேரில் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து நேற்று வந்து அஞ்சலி செலுத்தினார்.

வயது முதிர்வு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது குடும்பத்தினரும் உடன் வந்து இருந்தனர். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க. முத்து ஆவார். மு.க. முத்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்த அவர் வெளியே எங்கும் செல்லாமல் இருந்தார். தற்போது அவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு முதன்முறையாக வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து