பிரான்சு பூங்காவில் சுற்றுச்சூழலை பாதுகாத்து வரும் காக்கைகள்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      உலகம்
Crows 2018 8 13

பிரான்ஸ் : பிரான்சில் உள்ள ஒரு பூங்காவின் பெயர் புய் டு பவ். இந்த பூங்கா பிரான்சின் மேற்கு பகுதியில் ரொம்ப பிரபலமானது. இந்த பூங்காவிற்கு வரும் பொதுமக்கள்  கண்ட இடங்களில் குப்பைகளை போட்டு  விட்டு சென்று விடுகின்றனர். இது குறித்து பூங்கா நிர்வாகம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் யாரும் கேட்கவில்லை. 

இதனால் வெறுத்துபோன பூங்கா நிர்வாகம், மாற்று வழி ஒன்றை கண்டுபிடித்தது. அதன்படி 6 காகங்களுக்கு கீழே கிடக்கும் குப்பையை எடுத்து அங்குள்ள பெட்டி ஒன்றில் போட பயிற்சி அளித்தனர். அவ்வாறு பயிற்சி பெற்ற காகங்களும் கீழே கிடக்கும் சிகரெட் துண்டுகள் மற்றும் சின்ன சின்ன குப்பைகளை எல்லாம் எடுத்து சென்று அங்குள்ள குப்பை பெட்டியில் போட்டு வருகின்றன.

காகங்களின் இந்த நல்ல செயலுக்கு பரிசாக அந்த பெட்டிக்குள் இருந்து ஒரு ரொட்டி துண்டு வந்து வெளியே விழுகிறது. அந்த பரிசை எடுத்துக் கொண்டு இந்த 6 காகங்களும் பகிர்ந்து சாப்பிடுகின்றன.

இது பற்றி அங்குள்ள பூங்கா தலைவர் நிகோலஸ் டி வில்லியர்ஸ் கூறும் போது, இங்கு வரும் மக்கள் பெரும்பாலும் தூய்மையாக இருப்பதில் கவனமாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் சுற்றுசூழலை காக்க வேண்டும் என்பதை இயற்கை கூட நமக்கு கற்று கொடுக்கிறது என்பதை தெரிவிப்பதற்காகத்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து