இரவல் கோட் வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்த இம்ரான்கான்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      உலகம்
Imran Khan  posed for coat 1

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்ற இம்ரான்கான் புகைப்படம் எடுக்கும் போது கோட்டை கடன் வாங்கி அணித்திருக்கிறார். இந்த நிகழ்வு தற்போது அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் எம்.பி.யாக பதவியேற்றார். அப்போது எம்.பி. பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்துக்கான அடையாள அட்டை பெறுவதற்காக புகைப்படம் எடுப்பது வழக்கம். அவ்வாறு புகைப்படம் எடுக்கும்போதும் இம்ரான் கோட் அணியவில்லை, வெள்ளை நிற ஜிப்பா மட்டும் அணிந்திருந்தார். பின்னர் அங்கிருந்த நாடாளுமன்ற ஊழியரது கோட்டை அணிந்து கொண்டு அடையாள புகைப்படத்துக்கு இம்ரான் கான் போஸ் கொடுத்தார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து