முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி கூவலிங்கம் ஆறு வந்தடைந்த 18-ம் கால்வாய் நீட்டிப்பு தண்ணீரை ஓ.ப.ரவீந்திரநாத்குமார் மலர் தூவி வணங்கி வரவேற்றார்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

போடி. -  தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்ட 18-ம் கால்வாய் தண்ணீரானது போடிநாயக்கனூர் கூவலிங்கம் ஆற்றை வந்தடைந்த போது தேனி மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை செயலாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் மலர் தூவி வணங்கி வரவேற்றார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தீவிர முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட தேனி மாவட்டம், 18-ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டிக்கப்பட்டுள்ள கால்வாய்கள் சோதனை ஓட்டத்திற்கான தண்ணீரை கடந்த 25.08.2018-ம் தேதியன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் தலைமையில்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது 18-ம் கால்வாய் நீட்டிப்பு பணிகள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியினை அளித்தார்கள். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் 04.08.2014 அன்று சட்டசபையில் 110-விதியின் கீழ் 18-ம் கால்வாய் நீட்டிப்பு பணி திட்டம் பற்றி அறிவி;க்கப்பட்டது. அரசு உத்தரவின்படி இத்திட்டத்தினை நிறைவேற்றும் பொருட்டு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, கால்வாய் அமைப்பதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. இறுதி திட்ட வரைவு தயாரிக்கப்பட்டவுடன் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 14.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேவாரம், பொட்டிபுரம், ராசிங்காபுரம், சிலமலை, மேலச்சொக்கநாதபுரம் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 34 கிராமங்களின் வழியாக தேவாரம் அருகில் ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள சுத்தகங்கை ஓடையிலிருந்து போடிநாயக்கனூர் கூவலிங்க ஆறு வரை கால்வாய் ஏற்படுத்திட உத்தரவிட்டார்கள். இதனை தொடர்ந்து கடந்த 27.02.2016 அன்று காணொளிகாட்சியின் மூலமாக 18-ம் கால்வாய் நீட்டிப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி, மார்ச்-2018-ஆம் மாதம் இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கழக செயலாளர் சையதுகான், போடி நகர செயலாளர் பழனிராஜ், ஒன்றிய செயலாளர்கள் சின்னமனூர் விமலேஸ்வரன், போடி சற்குணம், போடி அனைத்து மகசூல் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நலச்சங்க தலைவரும், போடி ஜமீன்தாருமான வடமலை ராஜைய பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் குருமணி, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பாஸ்கரன், கழக பிரமுகர் இன்சுரன்ஸ் ராஜா, புரட்சிதலைவி அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் குறிஞ்சிமணி, மாவட்ட தொழிற்துட்ப பிரிவு சுதர்மன், பழனிசெட்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், வழக்கறிஞர் கோபி, சக்திவேல், போடி நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து