உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும்: டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
DAMU 4 PIC

வாஷிங்டன், உலக வர்த்தக அமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் அதிலிருந்து அமெரிக்கா விலகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் நடத்த நேர்காணல் ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும் போது, ஒருவேளை உலக வர்த்தக அமைப்பில் மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றால் அமெரிக்கா வெளியேறி விடும். இதுவரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் மோசமான ஒப்பந்தம் இதுவாகும் என்று விமர்சித்துள்ளார்.

டிரம்ப் அமெரிக்க அதிபராவதற்கு முன்னர் இருந்தே உலக வர்த்தக அமைப்பை கடுமையாக எதிர்த்து வந்தார். மேலும் அவ்வமைப்பு அமெரிக்காவுக்கு நியாயம் காட்டவில்லை என்று விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து