வெளியுறவு, பாதுகாப்புத்துறை இடையே இந்திய - அமெரிக்க பேச்சுவார்த்தை செப். 6-ல் டெல்லியில் நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
india ameiica flag 31-08-2018

புதுடெல்லி,இந்தியா, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையே செப்டம்பர் 6-ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோரிடையே செப்டம்பர் 6-ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதில் இருநாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் இவ்விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து