பாகிஸ்தான் ஐகோர்ட்டுக்கு முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      உலகம்
pakisthan women 02-09-2018

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:-பலூசிஸ்தான் மாகாண ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவிக்கு தஹிரா சப்தார் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் ஐகோர்ட்டுக்கு பெண் ஒருவர் தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

பலூசிஸ்தான் மாகாண கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாகணத்தின் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பலூசிஸ்தானின் முதல் சிவில் நீதிபதியாக கடந்த 1982-ம் ஆண்டு தஹிரா பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து