முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலில் பா.ஜ.க.வை வெல்ல அமெரிக்க நிபுணருடன் ராகுல் ஒப்பந்தம்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,லோக்சபா தேர்தலில், பா.ஜ.க.வை எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்ற நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தேர்தல் நிபுணர் ஸ்டீவ் ஜார்டிங் என்பவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசை மத்தியில் இருந்து அகற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க, பிரதமர் பதவியை கூட விட்டு கொடுக்க தயார் என்ற நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சில மாதங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது லண்டனில் ஸ்டீவ் ஜார்டிங் என்பவரை ராகுல் ரகசியமாக சந்தித்து பேசினார். ஸ்டீவ் ஜார்டிங் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். குறிப்பாக, தேர்தல் உத்திகளை உருவாக்குவதில் நிபுணர். இந்த சந்திப்புக்குப் பிறகு காங்கிரசுக்கு தேர்தல் உத்திகளை அமைத்து கொடுக்க, ஸ்டீவ் ஜார்டிங் நியமிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை ஸ்டீவ் ஜார்டிங் புதியவர் அல்ல. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உ.பி. சட்டசபை தேர்தலில், சமாஜ்வாடி கட்சிக்கு உதவும் பணியில் ஜார்டிங் நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு உத்திகளை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கூறினார். அந்த தேர்தலில், சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்படவும் ஜார்டிங் தலையீடு தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரசுக்கு உதவ ஸ்டீவ் ஜார்டிங் முன் வந்துள்ளார். அவர் அனேகமாக, ராகுலின் பிரச்சார உத்திகளை வகுப்பார் என்று தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து