புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      தமிழகம்
petrol-diesel-vehicle

சென்னை,சென்னையில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.82.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினந்தோறும்... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கடந்த மே மாதத்தில் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது.

புதிய உச்சம்... கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கு பின் ஒரே நாளில் 4 ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இதையடுத்து அனைத்து தப்பில் இருந்தும் எழுந்த கன்டனங்களை அடுத்து பைசா கணக்கில் தினமும் உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல் விலை தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

விலை கூடியது...இதுதொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடி வரும் எதிர்க்கட்சிகள், பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகின்றன. இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்று முன்தினம் விலையை விட 32 பைசா உயர்ந்து ரூ. ரூ.82.24க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 42 பைசா உயர்ந்து ரூ.75.19க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு மக்கள், வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் விளக்கம்...விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறித்து காங்கிரஸ் பொய் சொல்லி வருவதாகவும், எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு மத்திய அரசு காரணம் அல்ல. எண்ணெய் உற்பத்தி நாடுகளும், சர்வதேச பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுமே அதற்கு முக்கிய காரணம். இறக்குமதி செய்பவர் விலையை நிர்ணயிக்க முடியாது.

தற்காலிகம்தான்...ஈரான், வெனிசூலா போன்ற நாடுகள் பல்வேறு நெருக்கடியில் உள்ளன. அங்கு எண்ணெய் உற்பத்தி மிகக் குறைவாக உள்ளது. இதைத் தவிர, எண்ணெய் வளமிக்க மற்ற நாடுகளிலும் போதிய உற்பத்தி இல்லை.நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப் போவதாக அந்த நாடுகள் தெரிவித்திருந்தன. ஆனால், அந்த இலக்கு இதுவரை எட்டப்படவில்லை.அதுமட்டுமன்றி அமெரிக்க டாலருக்கு நிகரான பிற நாட்டு செலாவணிகளின் மதிப்பு சரிந்து வருகிறது.

இந்தக் காரணங்களால்தான் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இது தற்காலிகமான ஒன்றுதான் என்று தெரிவித்த அமைச்சர், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து