இத்லிப் மாகாண பகுதியில் குண்டு மழை பொழிந்த ரஷ்யா - மனித உரிமை அமைப்பு தகவல்

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      உலகம்
Idlib-russia airstrike 2018 9 5

டமாஸ்கஸ் : சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாகாணப் பகுதிகளில் ரஷ்ய விமானங்கள்  குண்டு மழை பொழிந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

அதிபர் அல் -அஸாதுக்கு ஆதரவாக ரஷ்யா நடத்தி வரும் இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி, அந்தப் பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேறிச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் உடனடி போரைத் தவிர்ப்பதற்காக சிரியா அரசுக்கு ஆதரவு அளித்து வரும் ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கியும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. எனினும், கிளர்ச்சியாளர்கள் பகுதியைச் சுற்றிலும் அரசுப் படைகள் குவிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:-

இத்லிப் மாகாணத்தில் 22 நாள்களுக்குப் பிறகு ரஷ்ய விமானங்கள் குண்டுவீச்சில் ஈடுபட்டன.அந்த மாகாணத்திலுள்ள கிளர்ச்சிப் படையினர் அண்டை மாகாணமான லடாகியாவிலுள்ள சிரியா ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. அதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இத்லிப் மாகாணத்தில் தனது வான்வழித் தாக்குதலை ரஷ்யா மீண்டும் நடத்தியது. இந்த விமானத் தாக்குதலில், பெரும்பாலும் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஹாயத் தஹ்ரீர் அல்-ஷாம் கடுப்பாட்டுப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து