முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் மத்திய மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஆகியவை தொடர்பாக  மத்திய அமைச்சர்கள், பொதுச் செயலர்கள் ஆகியோருடன் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக பா.ஜ.க. ஊடகப் பிரிவு தலைவர் அனில் பலூனி கூறியதாவது:

டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். கட்சியின் பொதுச் செயலர்கள் பூபேந்திர யாதவ், அருண் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிúஸாரம் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி, பல்வேறு விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதுபோன்ற ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் காலங்களிலும் நடைபெறும் என்றார் அனில் பலூனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து