தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      தமிழகம்
Meteorological Center 2017 02 22

சென்னை, உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதுாவது:

தென் உள் கர்நாடகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னல் உருவாகக்கூடும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர், சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் தலா 40 மி.மீ., பெரியாறில் 30 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் அவர்.

தமிழகத்தில் 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 100 டிகிரியை கடந்தது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், வேலூரில் 101 டிகிரியும், திருச்சியில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. திருத்தணியில் 99 டிகிரி வெப்பநிலை காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து