முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாற்றிலேயே அதிகபட்ச வீழ்ச்சியை சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாற்றிலேயே அதிக பட்சமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று மதியம் 12.40 மணியளவில் 72.08 என்ற அளவில் இருந்தது. நேற்று முன்தினம் வர்த்தக முடிவு நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.76 என்ற அளவில் இருந்தது. அதை ஒப்பிட்டால் நேற்று  0.40 சதவீதம் அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. தொடர்ந்து ஏழாவது நாளாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவிலிருந்து அந்த நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது கூடுதலாக 200 டாலர் பில்லியன் அளவுக்கு வரிகளை உயர்த்த திட்டமிட்டு உள்ளார். இந்த வரி உயர்வு அமலுக்கு வரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் சரிவடைய வாய்ப்பு உள்ளது.

சீன இறக்குமதி மீதான டிரம்ப் அரசின் வரி கூட்டு நடவடிக்கைகளால், கடந்த மூன்று மாதங்களில் சீனாவின் பணமான, யுவான் 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே நேரம் மத்திய, நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிலைமை சீரடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து