லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      இந்தியா
kashmir terrorist shot dead 2017 7 4

ஜம்மு,ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் காவல் துறையினரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவரும் காயமடைந்தார்.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் பகுதியில் உள்ள காவல் துறை முகாம் மீது வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி தரும் வகையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சண்டையின் போது காவலர் ஒருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதியிடம் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதி குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், தடை செய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் 3 மாதத்துக்கு முன்பு இணைந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது பலமுறை அவர் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்கள் பறித்தலிலும் ஈடுபட்டுள்ளார்.தற்போதும் முகாமில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து பயங்கரவாதிகள் பயன்படுத்திய 2 கார்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து