கிழக்கு உக்ரைனில் தேர்தல் ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      உலகம்
Heather Nauert 14-09-2018

வாஷிங்டன்,ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பாக, ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் கூறியதாவது:-
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அரசின் ஆதிக்கம் தொடந்து வருகிறது. இந்தச் சூழலில் அங்கு தேர்தல் நடத்தினால் அது நேர்மையான தேர்தலாக இருக்காது. மேலும், மின்ஸ்க் ஒப்பந்தத்தில் ரஷ்யா அளித்துள்ள வாக்குறுதிகளும், இந்தத் தேர்தலை நடத்துவதன் மூலம் மீறப்படுகின்றன. கிழக்கு உக்ரைன் பகுதியில் தனது நேர்மையற்ற நடவடிக்கைகளை ரஷ்யா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது, சர்வதேச சட்டங்களுக்கு அந்த நாடு மதிப்பளிப்பதில்லை என்பதையே காட்டுகிறது. அந்தப் பகுதியில் ரஷ்யா உருவாக்கியுள்ள டொனட்ஸ்க் லூஹான்ஸ்க் மக்கள் குடியரசு, உக்ரைன் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றார் அவர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து