தஜிகிஸ்தானின் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.148 கோடி நிதியுதவி இந்தியா வழங்கும்: ஜனாதிபதி

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      உலகம்
ramnath govind 2018 1 21

தஜிகிஸ்தான்,மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் வளர்ச்சி பணிகளுக்காக இந்தியா சார்பில் ரூ.148 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

3 நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் இமாமொலி ரமோன் உடன்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதை ஏற்றுக் கொண்டார். பின்னர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்து வகையான பயங்கரவாதம் மற்றும் வன்முறை மிக்க தீவிரவாதத்தை உறுதியோடு எதிர்கொள்ள இருதரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டன.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேலும் கூறியதாவது:-மத்திய ஆசிய பகுதிக்கு இது எனது முதல் பயணமாகும். இப்பகுதியில் இந்தியாவுக்கு மிக நெருக்கமான அண்டை நாடாக தஜிகிஸ்தான் உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியாவும் உறுப்பினராவதற்கு தஜிகிஸ்தான் அளித்த உறுதியான ஆதரவு, இருதரப்பு வியூகம் சார் ஒத்துழைப்பில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தஜிகிஸ்தானுடன் தற்போது, அரசியல் உறவுகள், வியூகம் சார் ஆராய்ச்சி, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில் நுட்பம், இளைஞர் நலன், கலாசாரம், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், தஜிகிஸ்தான் ராணுவத்துக்கு ஆங்கில மொழி ஆய்வகங்கள் இரண்டும் அமைத்துக் கொடுக்கப்படும். இந்தியாவும்-தஜிகிஸ்தானும் ஒருங்கிணைந்து சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை ஏற்படுத்த இயலும் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து