அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சார்பில் பாராட்டு விழா:

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      சிவகங்கை
9 karikudi news

காரைக்குடி:- அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் பேராசிரியரான இராம.இராமனாதன் அவர்கள் சிறந்த தமிழறிஞருக்கான செட்டிநாட்டரசர் டாக்டர் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது பெற்றமையைப் பாராட்டி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சார்பில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
  இவ்விழாவில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள் வரவேற்புரை நல்கினார், தலைமையுரையாற்றிய துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் விருதுப் பெற்ற பேராசிரியர் இராம.இராமனாதனின் தமிழ்ப்பணி மற்றும் சிலப்பதிகாரப் பணி ஆகியவற்றைப் பாராட்டி ஒவ்வொரு மாதமும் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிலப்பதிகாரம் பற்றிய சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
பேராசிரியர் இராம.இராமனாதன் அவர்களும் தமது ஏற்புரையில் சொற்பொழிவு ஆற்ற தமது இசைவைத் தெரிவித்தார். இப்பாராட்டு விழாவிற்கு நகரச் சான்றோர்கள் திரு.பெரியண்ணன், திரு.சக்தி திருநாவுக்கரசு, காரைக்குடி சுழற்சங்க ஆளுனர் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.  முனைவர் பட்ட ஆய்வாளர் கா.சுபா அவர்கள் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து