முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி குறித்து விமர்சனம் செய்த சசி தரூருக்கு எதிராக வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் அவதூறு வழக்குதொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சசி தரூர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "பிரதமர் மோடி, சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள் போன்றவர். அதனை கையால் அகற்றினால் நம்மை கொட்டி விடும். செருப்பால் அடித்தும் விரட்ட முடியாது. ஏனெனில், அது சிவலிங்கத்தின் மீது அமர்ந்துள்ளது' என்று ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாகக் குறிப்பிட்டார். தரூரின் கருத்துக்கு பா.ஜ.க. தவைர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த நிலையில், டெல்லி பாஜக துணைத் தலைவர் ராஜீவ் பப்பர், டெல்லி  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சசி தரூருக்கு எதிராக மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:சசி தரூர் குறிப்பிடும் ஆர்எஸ்எஸ் அதிருப்தி தலைவர், கடந்த 2012-ஆம் ஆண்டில் மோடியை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது உலக அளவில் பிரதமர் மோடியின் செல்வாக்கும், பா.ஜ.க.வின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், அதற்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தில் புதைந்துபோன ஒரு கருத்தை தற்போது நினைளபடுத்துவதில் உள்நோக்கம் உள்ளது.ஹிந்து கடளளையும், ஹிந்துக்களின் மத உணர்ளகளையும் காயப்படுத்தும் தீய நோக்கத்திலும், பிரதமர் மோடி மீதும், பா.ஜ.க. மீதும் தொண்டர்களும், ஆதரவாளர்களும் வைத்திருக்கும் நன்மதிப்பை குலைக்கும் நோக்கத்திலும் சசி தரூர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். என்னைப் போன்ற கோடிக்கணக்கான சிவபக்தர்களின் உணர்ளகளுக்கு மதிப்பளிக்காமல் சசி தரூர் பேசியுள்ளார். அவரது பேச்சு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் சிவபக்தர்களின் உணர்வைக் காயப்படுத்தி விட்டது என்று அந்த மனுவில் ராஜீவ் பப்பர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு, டெல்லி  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சமர் விஷால் முன்னிலையில்  பரிசீலனைக்கு வந்தது. மனுவை வரும் 16-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து