முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி ஆட்டநாயகனாக ஸ்டெயின் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பெர்த்,ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின்ச் மற்றும் ஹெட் களமிறங்கினர். போட்டியின் 3-வது ஓவரில் ஹெட் மற்றும் ஆர்கி ஷார்ட்டை வீழ்த்தி ஸ்டெயின் அசத்தினர். அதன்பிறகு, களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர்களின் வேகத்தில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்மூலம், அந்த அணி 38.1 ஓவர்கள் முடிவில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக, நாதன் கூல்டர் நைல் 34 ரன்களும், அலெக்ஸ் காரே 33 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக பெலுக்வாயோ 3 விக்கெட்டுகளையும், ஸ்டெயின், நிகிடி மற்றும தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணிக்கு டி காக் மற்றும் ஹென்ட்ரிக்ஸ் நல்ல தொடக்கம் அளித்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், டி காக் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹென்ட்ரிக்ஸ் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து அதிரடியாக ரன்சேர்த்து வந்த மார்க்கிராமும் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கேப்டன் டூ பிளெசிஸ் மற்றும் மில்லர் இறுதியில் வெற்றியை உறுதி செய்தனர். அந்த அணி 29.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி முதலிரண்டுவிக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டெயின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி வரும் 9-ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து