மதுரை, தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எப்போது தொடங்கும் ? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      தமிழகம்
HC Madurai Branch madurai 08-11-2018

மதுரை,மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என அறிக்கை அளிக்க மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பொதுநல மனு....மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதனை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும் மத்திய அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும் என்றும், கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்தத்தை விரைவு படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாற்றமில்லை.....அத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிற மாநிலங்களில் ஒரு இடம் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல இடங்கள் பரிந்துரைக்கப்பட்டதுதான் தாமதத்திற்கு காரணம் என்று தெரிவித்தார். மேலும் மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றும், அதில் மாற்றமிருக்காது எனவும் தெரிவித்தார்.

எப்போது தொடங்கும்? ..அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் கேட்டனர். மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் எவ்வளவு காலத்தில் நிறைவடையும்? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Cruel Animal Abuse: Pregnant Elephant Suffers Painful Death

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு 04.06.2020 | Coronavirus Update Tamil Nadu District Wise

கறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US

மலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி

Sylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

டம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி? | Ravindran Duraisamy Exclusive Interview

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Caramel Pudding with Azhagu Serial Actress Sahana Shetty | நடிகை சஹானா ஷெட்டியின் கேரமல் புட்டிங்

ஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து