மதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      வர்த்தகம்
Reserve Bank 09-11-2018

புது டெல்லி : பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் பணப்புழக்கம் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரியவந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு உயர்பண மதிப்புடைய ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். பின்னர் புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளும். தற்போது 200, 100, 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், பணப்புழக்கம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு பணப் புழக்கம் ரூ.17 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது புதிதாக 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதால் 2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரையிலான பணப் புழக்கம் ரூ. 20 லட்சத்து 15 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து