எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என் வெற்றிக்குப்பின்
என் மனைவி உள்ளார் என்று அங்கு நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்து, நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- அனைவருக்கும் அன்பான வணக்கம். கொளத்தூருக்கு வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும், உற்சாகம் வந்திடும், ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். மணமக்களை வாழ்த்துகிற விழா நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்வு வந்தால் எப்படி மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கிறோமோ அதே போல் வந்திருக்கும் அனைவரின் உணர்வுடந்தான் இருக்கிறோம்.
கொளத்துர் என்று சொன்னாலே சாதனை இல்லையென்றால் ஸ்டாலின் என்ற ஞாபகம் வரும். ஏராளமான திட்டங்களை இந்த தொகுதியில் நிறைவேற்றி இருக்கிறோம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதல் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் செல்வேன், ஆனால் கொளத்தூருக்கு மட்டும் 10 நாட்களுக்கு ஒரு முறை நான் வந்துவிடுவேன். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம் என நினைத்தால் சேகர்பாபு என்னை விடமாட்டார். ஒரு பட்டியலை அனுப்பி விடுவார். அதில் 10 விழாக்கள் இருக்கும். அதனை கொடுத்தபின் அந்த நிகழ்ச்சிகளுக்கு நான் வந்தால் தான் எனக்கு முழு திருப்தி இருக்கும்.
என்ன தான் பல மாவட்டங்களில், பல நிகழ்ச்சிகளிலும் தரும் வரவேற்பில் வரும் மகிழ்ச்சியை விட கொளத்தூருக்கு வரும்போது நீங்கள் தரும் வரவேற்பு தான் அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளையாக குறிப்பாக ஒரு நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறேன். அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கொளத்தூர் தொகுதிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அதிக மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. அதிக நூலகங்கள், அதிக மருத்துவமனைகள் உள்ள தொகுதி கொளத்தூர்.
கொளத்தூர் மக்கள் அளிக்கும் வரவேற்பில்தான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் உள்ளார் என்பதற்கு எத்தனையோ உதாரணம் உள்ளது. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். என் வெற்றிக்கு காரணம் என் மனைவிதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


