அதிபர் சிறிசேனா மனநிலையை பரிசோதிக்க கோரி இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்த பெண்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      உலகம்
Maithripala Sirisena 2019 01 08

கொழும்பு : இலங்கை அதிபர் சிறிசேனாவின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என்று தட்சிலா லக்மாலி ஜெயவர்த்தனே என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணிலை  கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். இவருக்கு போதிய மெஜாரிட்டி இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரணிலை மீண்டும் பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.

அதன் காரணமாக இலங்கையில் 2 மாதங்களாக அரசியலில் ஸ்திரமற்ற தன்மை நிலவியது. இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக தட்சிலா லக்மாலி ஜெயவர்த்தனே என்ற பெண் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை தேவையின்றி பதவி நீக்கம் செய்து நாட்டில் 2 மாதங்களாக அதிபர் சிறிசேனா குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். எனவே அவரது மனநிலையை பரிசோதித்து உடல்நிலையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அந்த மனுவை தள்ளுபடி செய்து 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு கூறியது. மேலும் வழக்கு செலவுக்காக தட்சிலா வக்மாலி ஜெயவர்த்தனே ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து