முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகுஜன், சமாஜ்வாடி கட்சிகளுடன் விரோதம் கிடையாது: ராகுல் காந்தி

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ரேபரேலி : பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுடன் விரோதம் கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் கூட்டணி...

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது,

உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலில் எனக்கு பிரியங்கா உதவி செய்யப் போகிறார் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ஜோதிராதித்யா சிந்தியா (உத்தரபிரதேச மாநில மேற்கு பிராந்திய பொதுச் செயலாளர்) மிகவும் சிறப்பான இளம் தலைவராவார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக உத்தரபிரதேசத்தில் கூட்டணியை அமைத்துள்ளது.

என்னுடைய பொறுப்பு..

எனக்கு அவர்களுக்கு எதிராக எந்த ஒரு விரோதமும் கிடையாது. காங்கிரசின் கொள்கையை முன்னெடுத்து செல்வது என்னுடைய பொறுப்பாகும். பா.ஜ.க.வின் கோட்டையாக விளங்கிய மத்திய பிரதேசத்தில் கடும் போட்டிக்கு இடையே காங்கிரசுக்கு வெற்றிக்கனியை பறித்து கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் ஜோதிராதித்யா சிந்தியா ஆவார் என்று ராகுல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து