முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உவர்ப்பு தண்ணீரை காந்த விசைக்கருவி மூலம் நல்ல தண்ணீராக மாற்றி விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் சிவகங்கை கலெக்டர் தகவல்

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      சிவகங்கை
Image Unavailable

 சிவகங்கை-    சிவகங்கை கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன்,  தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   முன்னோடி விவசாயி விளைநிலத்தில் காந்தவிசை கருவி பொருத்தப்பட்டு இயங்கி வரும் மின்மோட்டாரை பார்வையிட்டு தெரிவிக்கையில்,
         சிவகங்கை மாவட்டத்தில் சில பகுதிகளில் ஆழ்துளை கிணற்றில் உவர்ப்பு தன்மை வருவதாகவும் அதனால் முற்றிலும் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அவ்வப்போது கோரிக்கை வைத்து வந்தார்கள். இதை சரிசெய்வதற்கான வழியை மேற்கொள்ளும்விதமாக மாவட்டத்திலுள்ள குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் ஆராய்ச்சிக் குழு சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் தமறாக்கியிலும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் லெட்சுமிபுரத்திலும், சூராணம் ஊராட்சியிலும் என மூன்று இடத்தில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொதுவாக தண்ணீரில் உப்புத்தன்மை 0.4 முதல் 2 வரை மில்லி மோசஸ் அளவுதான் இருக்க வேண்டும். ஆனால் சோதனை செய்யப்பட்ட மூன்று இடத்திலுமே உப்புத்தன்மை 6 மில்லி மோசஸ் அளவிற்கு உள்ளது. இந்த அளவு உப்புத்தன்மை தண்ணீர் இருந்தால் விவசாயம் துளியளவு பார்க்க முடியாது. மேலும் இந்தத் தண்ணீரால் விளைநிலங்களில் உப்பு படிந்து மண்ணின் தன்மைதான் கெடும்.
        இதனைக் கருத்தில் கொண்டு வேளாண் ஆராய்ச்சி பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சியின் மூலம் உவர்ப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்ற விஞ்ஞான ரீதியாக காந்த சுழற்சி முறையை பயன்படுத்தி நல்ல தண்ணீராக மாற்ற திட்டமிட்டார்கள். அதன்விளைவாக காந்த சுழற்சி கருவி செயல்பாட்டின் மூலம் உவர்ப்பு நீர் நல்ல தண்ணீராக மாறி கிடைக்கப் பெற்;றுள்ளது. அதாவது இந்த காந்த சுழற்சி கருவியானது ஆழ்;துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டரில் தண்ணீர் வெளிவரும் பகுதியில் முன்பாக இந்த கருவியை பொருத்த வேண்டும். மோட்டாரிலிருந்து வெளிவரும் தண்ணீர் இந்த காந்தவிசை கருவி வழியாக சென்று வெளிவரும்பொழுது சோடியம் மற்றும் குளோரைடுடாக  தனித்தனியாக பிரிக்கப்பட்டு நல்லதண்ணீராக விளைநிலத்திற்கு வந்து சேருகின்றன. இதன்மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டுமென எவ்விதப் பாதிப்பின்றி நல்ல மகசூல் கிடைப்பதுடன் மண்வளமும் நன்றாக உள்ளன.
       முன்னோடி விவசாயி கன்னியப்பன் அவர்களின் விளைநிலத்தில் கடந்த பலஆண்டுகளாக நெல் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இந்த ஆண்டு ஆராய்ச்சி குழு செயல்பாட்டால் காந்தவிசை கருவி பொருத்தப்பட்டு 50 சென்ட் நிலப்பரப்பில் நெல் நடவு செய்து கதிர் நன்றாக உள்ளது. அதேபோல் சூராணத்தில் கடந்தாண்டு முன்னோடி விவசாயி உவர்ப்பு நீரில் விவசாயம் செய்து ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 20 மூடை நெல் மகசூல் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு அதே விவசாயி காந்தவிசை கருவியை பொருத்தி விவசாயப் பணிகளை மேற்கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் 32 மூடை நெல் மகசூல் பெற்றுள்ளார். அதேபோல் தமறாக்கியில் மிளகாய் சாகுபடி செய்து காய்கள் வீரியத்தன்மையுடனும், அதிகளவு மகசூலும் கிடைத்துள்ளது. இதன்மூலம் வருங்காலங்களில் விவசாயிகளின் மனக்கவலையை போக்கும்விதமாக மாவட்டத்தில் உவர்ப்பு நீர் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து ஆராய்ச்சிக் குழுவை அனுப்பி முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உவர்ப்பு நீர் உள்ளது எனக் கண்டறிந்தால் வேளாண் அறிவியல் ஆராய்ச்;சியாளர்களிடம் ஆலோசனை பெற்று காந்தவிசை கருவி பொருத்தி பயன்பெற்றிடலாம். விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் எப்பொழுதுமே தயாராக உள்ளது. எனவே விவசாயிகள் இதுபோன்ற உபகரணங்களை பயன்படுத்தி விளைநிலங்களில் தேவையான விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தெரிவித்தார்.
      இந்த செய்தியாளர்கள் பயணத்தின்போது குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மைய முதல்வர் முனைவர்.செந்தூர்குமரன், மண்ணியியல் பேராசிரியர்.விமலேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புத்துரை, அழகுமீனாள் மற்றும் முன்னோடி விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து