முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் பி.பி.சி. ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அதிபர் டிரம்ப் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பி.பி.சி. ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் ஆதரவாளர்...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில்  செய்தி சேகரிக்கச்சென்ற பி.பி.சி. தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பி.பி.சி. ஒளிப்பதிவாளர் ரோன் ஸ்கேன்ஸை நோக்கி சத்தம் போட்ட படி வந்த டிரம்ப் ஆதரவாளர், பி.பி.சி. ஒளிப்பதிவாளர் ரோன் ஸ்கேன்ஸை தாக்கினார்.

மறு ஆய்வு செய்ய...

இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ரோன் ஸ்கேன்ஸுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பி.பி.சி. நிறுவனத்திற்கான அமெரிக்க எடிட்டர் தனது ட்விட்டரில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சண்டர்ஸூக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், "செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஊடகத்தினர் பகுதிக்கு செல்லும் வழியானது கண்காணிப்பின்றி உள்ளது. தாக்குதல் நடந்த பிறகோ, அதற்கு முன்பாகவோ, எந்த ஒரு சட்ட அதிகாரிகளும் அங்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

டிரம்ப் விமர்சனம்

ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக செய்தி வெளியிடுவதாக டிரம்ப் பேசிக்கொண்டு இருந்த போது, அவரது ஆதரவாளர் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்படுவதை கண்டதும் தனது பேச்சை நிறுத்திய டிரம்ப், ஊடகத்தினரை நோக்கி, ஒன்றும் பிரச்சினை இல்லையே, எல்லாம் சரியாகத்தானே உள்ளது? என கேள்வி எழுப்பிவிட்டு பின் ஊடகங்களை விமர்சிக்க துவங்கினார். ஊடகங்கள் முற்றிலும் நேர்மையற்றவை எனவும் டிரம்ப் பேச்சின் போது குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து