முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்தின் உடல்நலம் குறித்த விசாரித்த ரஜினிகாந்த்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, சமீபத்தில் சென்னை திரும்பினார். அவரை அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து, நலம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்தும் கட்சித் தலைவர்கள் விஜயகாந்திடம் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்று விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார். சந்திப்புக்குப் பின் நடிகர் ரஜினி நிருபர்களிடம் கூறும் போது,

நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது முதலில் என்னை விசாரித்தவர் விஜயகாந்த். அவர் இப்போது நன்றாக இருக்கிறார். அரசியல் எதுவும் நாங்கள் பேசவில்லை. ஏற்கனவே நான் கூறிய அரசியல் பிரவேசம் பற்றிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து