மகேந்திரன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2019      சினிமா
Mahendran-death 2019 04 02

சென்னை, இயக்குனர் மகேந்திரன்  மறைவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர் திரையுலகில் நல்ல குடும்ப கதைகளை தந்து கலையுலகத்திற்கு பெருமையை சேர்த்தவர். அவரது இழப்பு திரையுலகிற்கு மிகப்பெரிய ஒரு இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து