உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தினேஷ் கார்த்திக் - விஜய் சங்கருக்கு வாய்ப்பு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      விளையாட்டு
Dinesh Karthik 2019 04 15

Source: provided

புதுடெல்லி : 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் இந்திய அணியல் 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக முக்கிய அணிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. மும்பையில் நேற்று நடைபெற்ற தேர்வுக் குழு‌ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி வீரர்கள்: விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியல் தற்காலிகப் பட்டியலே. மே 23ம் தேதிக்குள் இந்தப் பட்டியல் உள்ள பெயர்களை ஐசிசியின் அனுமதியில்லாமல் பிசிசிஐ மாற்ற முடியும்.

30-ம் தேதி ஆரம்பம்...

நேற்று அறிவிக்கப்பட்ட அணி வீரர்களில் ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உலகக்கோப்பை ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரானது மே 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்சில் தொடங்கி நடைபெற உள்ளது.  தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

4-வது உலகக்கோப்பை...

புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். அதேவேளையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை. ரிஷப் பந்த், அம்பதி ராயுடு ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது மகேந்திரசிங் தோனி விளையாடும் 4வது உலகக்கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து