எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார். அதற்காக அவர் ஞாயிற்றுக்கிழமை தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி த.வெ.க. தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணைக்காக, கடந்த டிசம்பா் இறுதியில் த.வெ.க. பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஏற்கெனவே நேரில் ஆஜராகினா்.
இதைத் தொடா்ந்து, கடந்த ஜன.12-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு த.வெ.க. தலைவா் விஜய்க்கு சி.பி.ஐ. தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. சி.பி.ஐ. சம்மனைத் தொடா்ந்து விசாரணைக்காக விஜய் திங்கள்கிழமை காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரங்களுக்கும் மேல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விஜய் பதில்களை எழுத்துப் பூர்வமாகவும், விடியோவாகவும் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
பிறகு பொங்கல் பண்டிகை காரணமாக, விஜய்யின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். இதனைத்தொடர்ந்து, விசாரணைக்கு மீண்டும் இன்று ஆஜராக விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக விஜய், நேற்று தனி விமானம் மூலம், சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று காலை விசாரணைக்காக விஜய் ஆஜராகிறார். இதனிடையே விஜய்யின் வருகையையொட்டி, டெல்லியில் காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


