எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனிடையே, சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் விடுமுறை கடந்த 14-ம் தேதி தொடங்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரை இருந்ததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர் கள் இன்று மீண்டும் அலுவலகம், பள்ளிக்குச் செல்ல ஏதுவாக இன்று மதியத்துக்கு பின் ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர்.
சனி, ஞாயிறு விடுமுறை இல்லாத தனியார் நிறுவன பணியாளர்கள் சிலர் நேற்று காணும் பொங்கல் முடிந்ததும் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களுக்குத் திரும்பினர். நேற்று முன்தினம் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,415 பேருந்துகளும், சென்னையைத் தவிர மற்ற நகரங்களுக்கு 2,060 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
நேற்று சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 3,100 பேருந்துகள் என மொத்தம் 5,192 பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்றும் இயக்கப்படும் அதேபோல சென்னையைத் தவிர மற்ற நகரங்களுக்கு 4,080 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் கூடுதலாக திங்கள்கிழமையும் விடுமுறை எடுத்து அன்றைய தினம் ஊர் திரும்பவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் சென்னைக்கு கூடுதலாக 1,500 பேருந்துகளும், மற்ற நகரங்களுக்கு 2,400 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


