லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் மனுதாக்கல்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      அரசியல்
Rajnath Singh-nominates 2019 04 16

லக்னோ, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராஜ்நாத்சிங், கடந்த 2000-ம் ஆண்டில் அம்மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர், மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மந்திரிசபையில் 2003-ம் ஆண்டில் வேளாண்மை துறை அமைச்சராக பதவியேற்றார். அதன் பிறகு 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள காசியாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2014 பாராளுமன்ற தேர்தலில் ராஜ்நாத் சிங் இதே மாநிலத்தின் தலைநகரான லக்னோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அவர் இந்த தேர்தலிலும் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று காலை பா.ஜ.க. தொண்டர்களுடன் பேரணியாக சென்று லக்னோ மாவட்ட கலெக்டரிடம் தனது வேட்பு மனுவை ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார். லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதே போல் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து