உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: ஜாப்ரா ஆர்சருக்கு இடமில்லை

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      விளையாட்டு
Jofra Archer 2019 04 17

லண்டன் : மே மாதம் 30-ம் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜாப்ரா ஆர்சர்-க்கு இடமில்லை.

10 அணிகள்

இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 15 பேர் கொண்ட வீரர்களின் தொடக்க பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

வீரர்கள் பட்டியல்:

1. மோகன் (கேப்டன்), 2. பேர்ஸ்டோவ், 3. ஜேசன் ராய், 4. ஜோ ரூட், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஜோஸ் பட்லர், 7. மொயீன் அலி, 8. கிறிஸ் வோக்ஸ், 9. லியாம் பிளங்கெட், 10. அடில் ரஷித், 11. மார்க் வுட், 12. அலேக்ஸ் ஹேல்ஸ், 13. டாம் குர்ரான், 14. ஜோ டென்லி, 15. டேவிட் வில்லே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து