எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கராச்சி : பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலோசிஸ்தான் மாகாணத்தில் பழங்குடியின மக்களுக்கும், பிரிவினைவாத மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் எழுகின்றது. இதனால், எப்போதும் பதற்றம் நிறைந்த பகுதியாக இங்குள்ள சில இடங்கள் காணப்படுகிறது.
இந்த நிலையில், கராச்சியில் இருந்து கவ்டாருக்கு பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்துகளை மடக்கிய துப்பாக்கிய ஏந்திய மர்ம நபர்கள், ஒவ்வொருவரையும் வரிசையாக சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து அடையாள அட்டையை பரிசோதித்த மர்ம நபர்கள், பேருந்தில் இருந்து 16 பேரை கீழே இறக்கினர். அவர்கள் மீது 15 முதல் 20 பேர் கொண்ட துப்பாக்கிய ஏந்திய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 16 பேரில் இரண்டு பேர் மட்டும் தப்பி ஓடினர். மீதமுள்ளோர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லெவீஸ் பகுதி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த கொலைக்கான காரணமும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் அடையாளமும் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |