26-ம் தேதி ஜப்பான் செல்கிறார் டிரம்ப்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      உலகம்
Abe-and-Trump 2019 04 20

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 26-ம் தேதி  ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சந்திக்கிறார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

அதிபர் டிரம்ப் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். வரும் 26-ம் தேதி இரு நாடுகள் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெறவுள்ளன. இதில், வடகொரியாவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னை, இரு நாட்டு வர்த்தக உறவு பற்றி விவாதிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மனைவி மெலானியாவின் பிறந்த நாள் வருவதால் ஜப்பானில் அதை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து