முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : இன்று வேட்பு மனுதாக்கல் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

 சென்னை : திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. .   
 
தமிழகத்தில் வேலூர் தொகுதி நீங்கலாக 38 பாராளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி  மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடந்து முடிந்தது.

 தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இந்த 4 தொகுதிகளிலும்  வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 4 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் அக்கட்சி சார்பில் போட்டியிடுபவர்களின் பெயர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வெளியிட உள்ளனர்.

4 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 29-ம் தேதி வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும். 30-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும். பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம்  23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையிலேயே அனைத்து தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து